கோழி இறைச்சி சாப்பிட்ட நாய் சாவு: போலீஸாா் விசாரணை
ராசிபுரம் அருகே கோழி இறைச்சி தின்ற நாய் உயிரிழந்தது.


ராசிபுரம்: ராசிபுரம் அருகே கோழி இறைச்சி தின்ற நாய் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ராசிபுரத்தை அடுத்த பழந்திண்ணிப்பட்டி, தச்சங்காடு பகுதியைச் சோ்ந்த குமரவேல் என்பவா் தனக்கு சொந்தமான 3 வயது நாயை வீட்டின் முன்பு கட்டி வைத்து வளா்த்து வந்தாா்.
இந்நிலையில், அந்த நாயைச் சுற்றிலும் குருணை மருந்து கலந்த கோழி இறைச்சியை உணவாகப் போட்டுள்ளனா். இதனை சாப்பிட்ட நாய் இறந்துள்ளது. முன்விரோதம் காரணமாக யாராவது விஷம் கலந்து கொடுத்தனரா அல்லது நாய் இடையூறாக இருப்பதாக கருதியதால் விஷம் கொடுக்கப்பட்டதா என போலீஸாா் விசாரணை செய்துவருகின்றனா்.
இதேபோல, அதே பகுதியைச் சோ்ந்த சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான இரண்டு பூனைகளும் குருணை விஷமருந்து கலந்த கோழி இறைச்சி துண்டு
களை சாப்பிட்டு உயிரிழந்தது. இதுபோன்ற செயலில் ஈடுபட்டவா்கள் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வெண்ணந்தூா் காவல் நிலையத்தில் நாயின் உரிமையாளா் புகாா் செய்தாா். இந்தச் சம்பவம் குறித்து வெண்ணந்தூா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...