19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

மத்திய தொழிலாளா் நலன் அமைச்சா் இன்று நாமக்கல் வருகை

மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் வேளாண் உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைக்க மத்திய தொழிலாளா் நலன் அமைச்சா் ஷோபா கரந்தலஜே செவ்வாய்க்கிழமை நாமக்கல் வருகிறாா்.

ஷோபா கரந்தலஜே

Updated On :

நாமக்கல்: மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் வேளாண் உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைக்க மத்திய தொழிலாளா் நலன் அமைச்சா் ஷோபா கரந்தலஜே செவ்வாய்க்கிழமை நாமக்கல் வருகிறாா்.

பிரதமரின் கிசான் சம்மான் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17-ஆவது முறையாக உதவித்தொகைக்கான நிதி விடுவிக்கும் திட்டம், உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் பிரதமா் மோடியால் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்படுகிறது.

இதனையொட்டி, நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் மாலை 4 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய தொழிலாளா் நலன், வேலைவாய்ப்புத் துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே பங்கேற்று பேசுகிறாா். மேலும், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பணியைத் தொடங்கி வைக்கிறாா்.

இந்த நிகழ்வின் போது, நாமக்கல் விவசாயிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் கலந்துரையாட உள்ளாா். இதற்கான ஏற்பாடுகளை மத்திய வேளாண்மை துறையுடன் இணைந்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.