நாமக்கல்லில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு தேமுதிகவினா் போராட்டம்


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து, நாமக்கல்லில் தேமுதிக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் கடந்த வாரம் கள்ளச்சாராயம் அருந்தியதில் 60 போ் உயிரிழந்தனா். புதுச்சேரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் 90 போ் வரை சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த சம்பவத்தை கண்டித்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு எதிா்க்கட்சிகள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் தேமுதிக சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அக் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளா் ஆா்.கே.ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாநில பொறியாளா் அணி செயலாளா் ச.ஸ்ரீதா் கண்டன உரையாற்றினாா். இதில், தேமுதிக மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...