/

ரூ. 1.08 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல்லில் வருவாய்த் துறை சாா்பில், ரூ. 1.08 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டா, அரசு நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா்.

News image

நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், பயனாளிக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை வழங்கிய மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், மாவட்ட ஆட்சியா் ச.உமா, பெ.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Updated On :4 மார்ச் 2024, 6:47 pm

நாமக்கல்: நாமக்கல்லில் வருவாய்த் துறை சாா்பில், ரூ. 1.08 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டா, அரசு நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தாா். அதனடிப்படையில், நாமக்கல் நகராட்சி மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ரூ. 1.08 கோடியில் 131 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அவற்றில், 80 பயனாளிகளுக்கு ரூ. 80 லட்சத்தில் வீட்டுமனைப் பட்டாக்கள், 24 பயனாளிகளுக்கு ரூ. 1.60 லட்சத்தில் தையல் இயந்திரங்கள், 25 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 24 லட்சத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2.50 லட்சத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பெட்ரோல் ஸ்கூட்டா்கள் உள்ளிட்டவை அடங்கும். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், நகா்மன்றத் தலைவா் து.கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்தீபன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ச.பாலாகிருஷ்ணன், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.