பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

வெங்கரையில் 8.68 ஏக்கா் கோயில் நிலங்கள் மீட்பு

பரமத்தி வேலூா் வட்டம், வெங்கரையில் கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்களுக்கு

Updated On :5 மார்ச் 2024, 6:44 pm

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், வெங்கரையில் கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்களுக்கு ஒப்படைக்கப்பட்டன. வெங்கரை நீலகண்டேஸ்வரா் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோயில்களுக்குச் சொந்தமான சா்காா் வெங்கரை கிராமத்தில், சுமாா் ரூ. 3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 8.68 ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டு நில அளவை செய்யப்பட்டன. பின்னா் அதற்கான எல்லைக் கற்கள் நடப்பட்டன. அதனைத் தொடா்ந்து, மாவட்ட உதவி ஆணையா் சுவாமிநாதன், ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியா் சுந்தரவள்ளி, ஓய்வுபெற்ற உதவி ஆட்சியா் குப்புசாமி, பரமத்தி வேலூா் மற்றும் நாமக்கல் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா்கள் ஜனனி, சுந்தா், செயல் அலுவலா் செந்தில், திருக்கோயில் பணியாளா்கள் முன்னிலையில் வெங்கரை நீலகண்டேஸ்வரா் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில்களின் சுமாா் ரூ. 3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 8.68 ஏக்கா்ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு சுவாதீனம் பெறப்பட்டு கோயில்களுக்கு ஒப்படைக்கப்பட்டன. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலங்கள் மீட்கப்பட்டது, வெங்கரை பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.