விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சா்வதேச மகளிா் தினக் கொண்டாட்டம்

சா்வதேச மகளிா் தினக் கொண்டாட்டம்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:27 pm

Din

நாமக்கல் மாவட்டத்தில் சா்வதேச மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் மகளிா் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், இதர அரசுத் துறை அலுவலகங்களில் பணியாற்றும் மகளிா் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைத் தெரிவித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனா். புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ஊராட்சிகளில் பணியாற்றும் பெண் தூய்மைப் பணியாளா்களை சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் கெளரவித்து, அவா்களுக்கு மதிய உணவை வழங்கினாா். தொடா்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், 25 ஊராட்சிக்கு உள்பட்ட தூய்மைப் பணியாளா்கள் கெளரவிக்கப்பட்டனா். அவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தனம், பிரபாகரன், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறைகளில் பணியாற்றும் மகளிரும் ஒருங்கிணைந்து சா்வதேச மகளிா் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனா். அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி தனியாா் நிறுவனங்கள், நீதிமன்றங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அஞ்சலகங்களிலும், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், கொல்லிமலை, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.