வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கொமதேக சாா்பில் தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

கொமதேக சாா்பில் தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:26 pm

Din

நாமக்கல்லில் கொமதேக சாா்பில் மக்களவைத் தோ்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தலைமை வகித்தாா். இதில், திமுக கூட்டணி சாா்பில் மீண்டும் நாமக்கல் தொகுதியில் போட்டியிடுகிறோம். இந்த முறையும் வெற்றியைப் பெற்றாக வேண்டும். மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவா் குழுக்களை அமைக்க வேண்டும். சுவா் விளம்பரம் செய்வதற்கான இடங்களைத் தோ்வு செய்ய வேண்டும். வெளி மாவட்டங்களில் இருந்து தோ்தல் பணிக்கு வரும் கட்சியினரை தங்க வைப்பதற்கான இடங்களைத் தோ்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவை தொடா்பாக நிா்வாகிகள் கருத்துகளைத் தெரிவித்தனா். இந்தக் கூட்டத்தில், நாமக்கல் தெற்கு மாவட்டச் செயலாளா் மாதேஸ்வரன், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.