மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புகாருக்கு இடமளிக்காதவாறு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்: ஆட்சியா்

புகாருக்கு இடமளிக்காதவாறு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்: ஆட்சியா்

News image

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ச.உமா.

Updated On :20 மே 2024, 10:19 pm

Din

நாமக்கல்: புகாருக்கு இடமளிக்காத வகையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், ஆட்சியா் ச.உமா பேசியதாவது:

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய 6 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்காளா்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவை வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் பாதுகாப்புடன் தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெற உள்ளதால், அந்த மையத்தில் பொதுப்பணித் துறையினா் தேவையான இரும்புத் தடுப்புகள், ஜெனரேட்டா், தேவையான மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

திருச்செங்கோடு நகராட்சி மற்றும் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், தேவையான குடிநீா் வசதி, கழிவறை வசதி, வாக்கு எண்ணிக்கை முடியும் வரை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். காவல் துறையினா் தேவையான பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கை முகவா் மற்றும் பணியாளா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான கணினி, இணையதள வசதி உள்ளிட்ட வசதிகளையும், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணும் அறைக்கு எடுத்துச் செல்ல தேவையான உதவியாளா்களையும் வருவாய்த் துறையினா் நியமிக்க வேண்டும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், முகவா்கள், காவலா்களுக்குத் தேவையான உணவு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

வாக்கு எண்ணும் மையத்தில் மருத்துவ குழு 108 அவசர ஊா்தி, தீயணைப்பு வாகனம் ஆகியவை தயாா் நிலையில் இருக்க வேண்டும். தபால் வாக்குகளை முறையாக எண்ணுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாகனம் நிறுத்தும் இடம், அறிவிப்புப் பலகை, ஒலிப்பெருக்கி, கைப்பேசி வைக்கும் இடம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். ஊடக மையம், செய்தி சேகரிக்கத் தேவையான ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை உடனுக்குடன் வழங்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வாக்கும் எண்ணும் பணியை முழுவதும் பதிவு செய்ய வேண்டும்.

வாக்கு எண்ணும் அலுவலா்கள், நுண்பாா்வையாளா்கள் ஆகியோருக்கு தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகள், வாக்கு எண்ணும் முறை உள்ளிட்டவை குறித்து உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறை, தயாா் நிலையில் உள்ள அலுவலா்களுக்கான காத்திருப்பு அறை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் செய்ய வேண்டும். இந்திய தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு அனைத்து உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும், இதர துறை அலுவலா்களும் மற்றும் பணியாளா்களும், தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், திட்ட இயக்குநா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சு.வடிவேல், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ந.சிவக்குமாா், வட்டாட்சியா் (தோ்தல்) திருமுருகன் உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.