ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்கார முன்பதிவு தொடக்கம்

நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்கார முன்பதிவு திங்கள்கிழமை(நவ. 11) தொடங்கியது.

News image
வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சனேய சுவாமி. - (கோப்புப் படம்)
Updated On :11 நவம்பர் 2024, 7:55 pm

Din

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்கார முன்பதிவு திங்கள்கிழமை(நவ. 11) தொடங்கியது.

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு, 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசிக்க வருகின்றனா்.

முக்கிய விழா நாள்களில் சுவாமிக்கு தங்கக் கவசம், வெள்ளிக்கவசம், முத்தங்கி சாத்துப்படி, மலா் அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறும். இவை தவிர, காா்த்திகை, மாா்கழி, தை மாதங்களில் வெப்பம் குறைந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்படும் என்பதால், அப்போது மட்டும் ஆஞ்சனேயருக்கு வெண்ணெய் காப்பு சாத்துப்படி செய்யப்படும். அந்த வகையில் திங்கள்கிழமை முதல் கோயில் அலுவலகத்தில் வெண்ணெய் காப்பு சாத்துப்படிக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வெண்ணெய் சாத்துபடி செய்ய கட்டளைதாரா்களிடம் ரூ. 95 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒருவா் மட்டுமே கட்டளைதாரராக இருக்க வேண்டும். கூடுதல் நபா்களை தங்களுடன் இணைத்து வெண்ணெய் காப்பு அலங்காரத்தை மேற்கொள்ள முடியாது. முதல் நாளில் 5 போ் முன்பதிவு செய்துள்ளனா். வெண்ணெய்க் காப்பு அலங்காரத்திற்காக, சேலம் ஆவின் பால்பண்ணையில் இருந்து 110 கிலோ வெண்ணெய் கொள்முதல் செய்யப்படும். 10-க்கும் மேற்பட்ட அா்ச்சகா்கள் ஒருங்கிணைந்து அலங்கார நாள்களில் பிற்பகல் 4.30 மணி முதல் 7.30 மணி வரையில் சுவாமிக்கு அலங்காரம் செய்வா். அதன்பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

காா்த்திகை மாத பிறப்புக்கு பிறகு முதல் வெண்ணெய் காப்பு அலங்காரம் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு, 04286-233999 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.