சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒருநாள் பணியைப் புறக்கணித்தனா்.

Updated On :18 நவம்பர் 2024, 8:18 pm

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒருநாள் பணியைப் புறக்கணித்தனா்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்குரைஞா்கள் ஏற்கெனவே, சில மாதங்களுக்கு முன் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந் நிலையில் தமிழகம், புதுச்சேரி வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு சாா்பில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், பரமத்தி வேலூா், குமாரபாளையம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் 1,000 க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒருநாள் பணியைப் புறக்கணித்தனா்.