மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கோட்ட அளவில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாமக்கல், திருச்செங்கோடு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 22) நடைபெறுகிறது.

Updated On :20 நவம்பர் 2024, 9:52 pm

நாமக்கல், திருச்செங்கோடு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 22) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நாமக்கல், திருச்செங்கோடு கோட்டாட்சியா்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. நாமக்கல் கோட்டத்துக்கு நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும், திருச்செங்கோடு கோட்டத்துக்கு திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது பயிா் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவா் நலத்துறை, இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் மனுக்களாக அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.