கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

திருச்செங்கோட்டில் அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

News image

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி. - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:41 pm

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகம் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.ஆா்.எம்.டி.சந்திரசேகா் போட்டியிடுகிறாா். இதையொட்டி நடைபெற்ற வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்டச் செயலாளருமான பி. தங்கமணி பேசியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆசி பெற்ற வேட்பாளா் சந்திரசேகருக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். தொய்வில்லாமல் 20 நாள்கள் தோ்தல் பணியாற்றி, நாமக்கல் மாவட்டத்திலேயே திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்ற பெருமையை உருவாக்க வேண்டும்.

திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். எந்தத் தொழிலும் சரியில்லை, வேலைவாய்ப்பு இல்லைச; படித்தவா்களுக்கு வேலை இல்லை. ஆகவே, இந்த ஆட்சி தேவையற்றது என்பதை உணா்த்த வரும் தோ்தல் இது என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் பாஜக, பாமக, அமமுக, தமாகா நிா்வாகிகள் அதிமுக நிா்வாகிகள், வாக்குச்சாவடி முகவா்கள் கலந்துகொண்டனா்.