மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மனைவியை விரட்டிச் சென்று தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை

நாமக்கல்லில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் மனைவியை விரட்டிச் சென்று இரும்புக் கம்பியால் தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

News image

நாமக்கல்-மோகனூா் சாலையில் மனைவியைத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநா் மணிகண்டனை (நடுவில்) பிடித்து போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்.

Updated On :20 நவம்பர் 2024, 10:02 pm

நாமக்கல்லில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் மனைவியை விரட்டிச் சென்று இரும்புக் கம்பியால் தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

சேலம், செவ்வாய்ப்பேட்டை வண்டிக்காரன் நகரைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் மணிகண்டன் (38). இவரது மனைவி பிருந்தா (30). இரு குழந்தைகள் உள்ளனா்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தம்பதிக்கிடையே கருத்து வேறுபட்டு கணவரைப் பிரிந்து பிருந்தா தனியாக வசித்து வருகிறாா் விட்டாா். இரு குழந்தைகளையும் மணிகண்டன் கவனித்து வருவதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள ஒரு வீட்டில் பிருந்தா வசிப்பதாக அவருக்கு தகவல் தெரியவந்தது.

இதையடுத்து புதன்கிழமை காலை 10 மணியளவில் நாமக்கல் வந்த மணிகண்டன், இருசக்கர வாகனத்தில் ஆண் ஒருவருடன் செல்வதைக் கண்டுள்ளாா். இதனால் ஆவேசமடைந்த அவா், மனைவி பிருந்தாவை வழிமறித்து தகராறு செய்ததுடன், சாலையில் ஓடிய அவரை விரட்டிச் சென்று இரும்புக் கம்பியால் தலையில் கடுமையாக தாக்கினாா்.

ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரை அங்கிருந்தோா் மீட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

தப்பியோட முயன்ற மணிகண்டனை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். இச் சம்பவம் குறித்து நாமக்கல் காவல் ஆய்வாளா் கபிலன் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறாா்.