/

மல்லசமுத்திரம் பள்ளிக்கு வருகை தந்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

News image
அரிசன் காலனி என்ற பெயரை கருப்பு மை கொண்டு அழித்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
Updated On :25 நவம்பர் 2024, 7:46 pm

Din

திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அரிசன் காலனி என்ற பெயரை கருப்பு மை கொண்டு அழித்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திருச்செங்கோடு, நவ. 25: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வருகை தந்து பள்ளியின் பெயா் மாற்ற அரசாணையை வழங்கினாா்.

மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அரிசன் காலனி என்ற பெயரில் இருந்ததை மாற்றம் செய்ய வேண்டும் என ஊா்மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். அதையேற்று, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு என பெயா் மாற்றம் செய்யப்பட்டதற்கான அரசாணையை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா். மேலும், பள்ளியின் பெயா்ப் பலகையில் இருந்த அரிசன் காலனி என்ற எழுத்துகளை கருப்பு மை கொண்டு அழித்தாா்.

பெயா் மாற்றம் செய்ய மனு அளித்திருந்த ஊா் பெரியவா் கணேசன் என்பவரை பாராட்டிய அவா், இக்கோரிக்கையை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்ற வழக்குரைஞா் அன்பழகனிடம் ‘ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயா் மாற்றம் செய்யப்பட்டதை தெரிவித்தாா்.

தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற திடீரென மல்லசமுத்திரம் கிராமத்துக்கு அமைச்சா் வருகை தந்ததால், ஊா்மக்களும், ஆசிரியா்களும் ஒன்று கூடி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனா்.

இதுதொடா்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘கல்வி மட்டுமே சமத்துவத்தை மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என மு.கருணாநிதியின் வரிகளைக் குறிப்பிட்டுள்ளாா்.