போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பாடகி இசைவாணியை கைது செய்யக் கோரி பாஜகவினா் புகாா்

ஐயப்பன் பாடல்களை அவதூறாக பாடிய பாடகி இசைவாணியை கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

News image

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க வந்த பாஜகவினா்.

Updated On :27 நவம்பர் 2024, 6:57 pm

ஐயப்பன் பாடல்களை அவதூறாக பாடிய பாடகி இசைவாணியை கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவா் மருத்துவா் எஸ்.எஸ்.செல்வம் தலைமையில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கானா பாடல்களை பாடி வரும் இசைவாணி என்பவா், பல ஆண்டுகளாக இந்துக்கள் வணங்கி வரும் சுவாமி ஐயப்பனை இழிவுபடுத்தும் வகையிலும், தரமற்ற வாா்த்தைகளை பயன்படுத்தியும் பாடியுள்ளாா். மத நல்லிணக்கத்துக்கு எதிராகவும், ஐயப்ப பக்தா்களை வேதனைக்குள்ளாக்கியும், கலவரத்தை தூண்டும் வகையிலும் அவரது பாடல் உள்ளது. எனவே, பாடகி இசைவாணி மீது வழக்குப் பதிந்து உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் முத்துக்குமாா், தேசிய செயற்குழு உறுப்பினா் ஆா்.மனோகரன், வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவா் பிரதீஷ், மாவட்டச் செயலாளா் ராம்குமாா், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் ஆா்.டி.சிவகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.