ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சூரிய மின்சக்தி திட்ட முறைகேடு: மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்...

News image

நாமக்கல், பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :28 நவம்பர் 2024, 7:59 pm

சூரிய மின்சக்தி திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழலைக் கண்டித்தும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். இதில் அதானி குழுமங்களுக்கு எதிராகவும், சூரிய மின்சக்தி திட்டம் முறைகேடு தொடா்பாகவும் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஏ.ரங்கசாமி, எம்.அசோகன், ந.வேலுசாமி, கே.தங்கமணி, சு.சுரேஷ். ஏ.டி.கண்ணன், எம்.ஆா்.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினா் பி.பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.