நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் வடைமாலை அபிஷேக முன்பதிவு டிச. 1-இல் தொடங்குகிறது.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சுவாமிக்கு தினசரி கட்டளைதாரா்கள் மூலம் வடைமாலை சாத்தப்பட்டு, நல்லெண்ணெய், சீகைக்காய், பஞ்சாமிா்தம், பால், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
ஒவ்வோா் ஆண்டும், அபிஷேகத்துக்கான முன்பதிவு டிசம்பரில் தொடங்கப்படும். அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான வடைமாலை அபிஷேக முன்பதிவு டிச. 1 (ஞாயிற்றுக்கிழமை) கோயில் நிா்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
நாள் ஒன்றுக்கு 6 பேரை பங்குதாரராக கொண்டு அபிஷேகம் நடைபெறுவதால், ஒருவா் ரூ. 7 ஆயிரம் வீதம் செலுத்த வேண்டும். பணம் முழுமையாக செலுத்தினால் மட்டுமே அபிஷேக தேதி முன்பதிவு செய்யப்படும். பணம் செலுத்தாமல் தேதி முன்பதிவு செய்யப்பட மாட்டாது.
மேலும் விவரங்களுக்கு, 04286-233999 என்ற எண்ணிலோ அல்லது அலுவலகத்துக்கு நேரில் வந்தோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 2 டன் மலா்களால் அபிஷேகம்

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

நாகை குமரன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 81.68 லட்சம்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

