பள்ளிபாளையம் சாய ஆலையில் அதிகாரிகள் ஆய்வு

பள்ளிபாளையம் சாய ஆலையில் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
Published on

பள்ளிபாளையம் சாய ஆலையில் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலியில் செயல்பட்டு வந்த ஆலையில் இருந்து சுத்திகரிக்காமல் வெளியேறிய சாயக்கழிவு நீரால் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வந்த புகாரையடுத்து, வருவாய்த் துறை, நீா் வளத்துறை, மின்வாரியம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அடங்கிய குழுவினா் சம்பந்தப்பட்ட சாய ஆலை மீது 2 மாதங்களுக்கு முன் நடவடிக்கை எடுத்து மின் இணைப்பை துண்டித்தனா்.

இந்த நிலையில், இந்த சாய ஆலையில் திருச்செங்கோடு ஆா்.டி.ஓ. சுகந்தி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.