தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மோப்பநாயுடன் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :18 மார்ச் 2026, 11:39 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மோப்பநாயுடன் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்திக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா், மோப்ப நாய் நிலாவை அழைத்துவந்து ஆட்சியா் அலுவலகம், ஆட்சியரக வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனா்.

ஒருமணி நேர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியவா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.