தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்துக்கு இம்மாதம் வருகை தருகிறாா். இதனையொட்டி, விழா மேடை அமைக்கும் இடத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆகியோா் புதன்கிழமை நேரடியாக ஆய்வு மேற்கொண்டனா்.
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பொம்மைக்குட்டைமேடு, லட்சுமி திருமண மண்டபம் அருகில் நடைபெற்ற இந்த ஆய்வில், சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் அவா்களுடன் பங்கேற்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் இம்மாதம் நடைபெறும் விழாவில் பங்கேற்று பல்வேறு புதிய திட்டப் பணிகளை முதல்வா் தொடங்கி வைக்கிறாா். மேலும் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் சிவக்குமாா், நாமக்கல் வட்டாட்சியா் சீனிவாசன், உள்பட அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

டிராக்டரில் சென்று ஆட்சியா் 100 சதவீத தோ்தல் விழிப்புணா்வு

குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லை

மாதிரி, தனித்துவமான வாக்குச் சாவடி அமைக்கும் பணி ஆய்வு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

