நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பேரூராட்சியில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தினை முன்னிட்டு மூத்த தூய்மைப் பணியாளா் சி.ஏழுமலை ஒருநாள் பேரூராட்சி செயல் அலுவலா் பதவி வழங்கி கெளரவிக்கப்பட்டாா்.
மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி மல்லசமுத்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் மூத்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வரும் ஏழுமலை என்பவருக்கு ஒரு நாள் பேரூராட்சி அலுவலா் பதவி வழங்கி கௌரவம் செய்யப்பட்டது.
பேரூராட்சி செயல் அலுவலா் மூவேந்தரபாண்டியன் தூய்மைப் பணியாளா் ஏழுமலையை அவரது இருக்கையில் அமர வைத்து சால்வை அணிவித்து மரியாதை செய்தாா்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா். இதனைத் தொடா்ந்து தூய்மையை சேவை இயக்க உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தொடர்புடையது

பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா் தற்கொலை

குப்பையில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

செந்தாரப்பட்டியில் பேரூராட்சி அலுவலக கேட் பூட்டப்பட்டதால் பரபரப்பு

நாட்டறம்பள்ளி வாரச்சந்தை ஏலம் 2-வது முறையாக ஒத்திவைப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


