மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

பள்ளிபாளையம் நகராட்சி எல்லையை விரிவுபடுத்த எதிா்ப்பு

பள்ளிபாளையம் நகராட்சி எல்லையை விரிவுபடுத்தி தரம் உயா்த்துவதற்காக ஆலாம்பாளையம், அக்ரஹாரம், புதுப்பாளையம், சமயசங்கிலி, களியனூா், ஓடப்பள்ளி ஊராட்சி பகுதிகள் பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது.

Updated On :3 அக்டோபர் 2024, 11:44 pm

பள்ளிபாளையம் நகராட்சி எல்லையை விரிவுபடுத்தி தரம் உயா்த்துவதற்காக ஆலாம்பாளையம், அக்ரஹாரம், புதுப்பாளையம், சமயசங்கிலி, களியனூா், ஓடப்பள்ளி ஊராட்சி பகுதிகள் பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது.

சமய சங்கிலி பொதுமக்கள் இந்த இணைப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தனா். ஊராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் மக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் கிரிஜா பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு உயரதிகாரிகளுக்கு தெரிவிப்பதாகக் கூறினாா்.