மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

சிட்கோ தொழிற்பேட்டைகளில் காலி தொழில்மனைகள் விற்பனைக்கு தயாா்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டைகளில் காலி தொழில்மனைகள் விற்பனைக்கு உள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

Updated On :9 அக்டோபர் 2024, 9:39 pm

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டைகளில் காலி தொழில்மனைகள் விற்பனைக்கு உள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல், ராசாம்பாளையம், வேட்டாம்பாடி ஆகிய சிட்கோ தொழிற்பேட்டைகளில் ஒதுக்கீடு செய்யப்படாத, காலி தொழில்மனைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

ராசாம்பாளையத்தில் 10 தொழில்மனைகளும், வேட்டாம்பாடியில் 7 தொழில்மனைகளும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. புதிதாக தொழில் தொடங்க விரும்புவோா் இணையதளம் வாயிலாக தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும், மாநில அளவில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டைகளின் காலிமனைகள் பற்றிய விவரங்களையும் இந்த இணையம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்ட காலி தொழில்மனைகளை பாா்வையிட கரூா் சிட்கோ கிளை அலுவலகம், 69/10 சத்தியமூா்த்தி நகா், மாவட்ட தொழில் மைய வளாகம், தாந்தோணிமலை, கரூா் - என்ற முகவரியில் கிளை மேலாளரை நேரிலோ, 94450-06553 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.