மல்லசமுத்திரத்தில் பருத்தி, நிலக்கடலை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் பருத்தி, நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
Updated on

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் பருத்தி, நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.

பருத்தி ஏலத்துக்கு 250 மூட்டைகள் வந்ததில் பி.டி ரகம் (100 கிலோ) ரூ. 7,109 முதல் ரூ. 8,010 வரையிலும், சுரபி ரகம் ரூ. 8,060 முதல் ரூ. 10,009 வரையிலும்

கொட்டு ரகம் ரூ. 4,210 முதல் ரூ. 5,920 வரையிலும் விற்பனையானது. மொத்தமாக ரூ. 5 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது. அடுத்த பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெறும்.

நிலக்கடலை ஏலதுக்கு 15 மூட்டைகள் கொண்டு வரப்பட்டதில் பட்டாணி (60 கிலோ) ஈரப்பதம் ரூ. 2,450 வரையிலும் கொடி ஈரப்பதம் ரூ. 1,899 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 20 ஆயிரத்திற்கு நிலக்கடலை விற்பனையானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com