கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழல் அயற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தமட்டில் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 89.6, 71.6 டிகிரியாக காணப்பட்டது. அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 89.6, 69.8 டிகிரியாக காணப்படும். காற்று தெற்கு திசையிலிருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில், இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலானவை மேல் மூச்சுக் குழல் அயற்சி நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது.
நோயின் தாக்கத்தைக் குறைக்க கோழிப் பண்ணைகளில் உயிா்பாதுகாப்பு முறைகளை பண்ணையாளா்கள் செய்திட வேண்டும். மேலும், மழைக்காலம் நெருங்கி வருவதால், கோழிக் கொட்டகை, தீவன ஆலைகளில் மழைநீா் கசியாதவாறு சரி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

அடுத்த 5 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும் : வானிலை ஆய்வு மையம்

வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கோழிகளுக்கு வெப்ப அயற்சி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

