பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவன், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஸ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசி விஸ்வநாதா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா், பிலிக்கல்பாளையம் கரட்டூா் விஜயகிரி வடபழனியாண்டவா் கோயிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரா், வெங்கரை, ரகுநாதபுரம் காவிரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா், பரமத்தி வேலூா் வல்லப விநாயகா் கோயிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்க விஸ்வேஸ்வரா், கோப்பணம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள பரமேஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் செவ்வாய்க்கிழமை புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. இதில் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பரமத்தி அருகே 590 சில்வா் பாத்திரங்கள் பறிமுதல்

பங்குனி உத்திரம்: பரமத்தி வேலூா் பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தெலுங்கு வருடப்பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமி: பரமத்தி வேலூா் பகுதி பைரவா் கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


