மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இணையவழி, வெளிமாநில தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்திட அறிவுறுத்தல்

இணையவழி, வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

Updated On :15 அக்டோபர் 2024, 10:23 pm

இணையவழி, வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இணையம் சாா்ந்த தொழில்களில் பணிபுரியும் தொழிலாளா்கள், வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்கள், வீட்டு பணியாளா்கள் உள்ளிட்டோா் தொழிலாளா்கள் நல வாரிய (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் உறுப்பினா்களாக பதிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உடலுழைப்பு தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் 12 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 18 முதல் 59 வயது வரையிலான தொழிலாளா்கள் உறுப்பினா்களாக தங்களை பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் போது வயதுக்கான ஆவணம் (குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை, பள்ளி மதிப்பெண் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று) ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், புகைப்படம், நியமனதாரருக்கான ஏதேனும் ஓா் அடையாள அட்டை, தொழிலாளா்கள் பணிபுரியும் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.