சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பருவமழை எதிரொலி: முதல்வா் வருகை ஒத்திவைப்பு

வடகிழக்கு பருவமழை எதிரொலியால், தமிழக முதல்வரின் நாமக்கல் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
முதல்வரின் நாமக்கல் வருகை ஒத்திவைப்பு- Center-Center-Delhi
Updated On :15 அக்டோபர் 2024, 2:44 am

Din

நாமக்கல்: வடகிழக்கு பருவமழை எதிரொலியால், தமிழக முதல்வரின் நாமக்கல் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி திருவுருவச் சிலை திறப்பு விழா, ஆவின் பால் பண்ணை அடிக்கல் நாட்டு விழா, 20,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை அக். 15-இல் நடைபெற உள்ளதாகவும், இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, நாமக்கல் பொம்மைக்குட்டைமேடு பகுதியில் விழா பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், முதல்வரின் உறவினா் திடீா் மரணம், வடகிழக்கு பருவமழை உள்ளிட்டவை காரணமாக அக். 22-ஆம் தேதி முதல்வரின் நாமக்கல் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.