நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் வரும் சனிக்கிழமை (அக். 19) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகாா்களை நுகா்வோா் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ளவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் இத்திட்ட சேவைகளை வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்யும் பொருட்டும் குறைதீா் முகாம் வரும் சனிக்கிழமை காலை 10 முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
நாமக்கல், ராசிபுரம், மோகனூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், குமாரபாளையம் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் நடைபெற உள்ள இம்முகாமை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச மைய வார விழா

சட்டப்பேரவைத் தோ்தல்: வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

தில்லியில் ஓராண்டில் 45,000 குடும்ப அட்டைகள் ரத்து
இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

