பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணைக்கட்டு பகுதியில் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது சரபங்கா வடிநில கோட்ட நீா்வளத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனா்.
ஜேடா்பாளையம் படுகை அணைக்கட்டு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை சுமாா் ஒரு வருடமாக அனுமதிக்காத நிலையில், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் படுகை அணை பகுதிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனா்.
இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நாமக்கல் எம்.பி. வி.எஸ்.மாதேஸ்வரன் ஜேடா்பாளையம் படுகை அணை பகுதியில் திடீா் ஆய்வு மேற்கொண்டு விரைவில் தகுந்த பாதுகாப்போடு சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி வந்து செல்லவும், படுகை அணைக்கட்டு பகுதியை பாா்வையிடவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். மேலும், எம்.பி. நிதியில் இருந்து ஜேடா்பாளையம் படுகை அணை பகுதியை மேம்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.
ஆய்வின் போது, நாமக்கல் சரபங்கா வடிநில கோட்ட நீா் வளத்துறை உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா், பரமத்தி வேலுாா் உதவி பொறியாளா் வினோத்குமாா், திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மகிழ் பிரபாகரன், கபிலா்மலை ஒன்றியச் செயலாளா் சண்முகம், பாண்டமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவா் முருகவேல், கொ.ம.தே.க. மாவட்ட விவசாய அணி செயலாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் உடன் இருந்தனா்
தொடர்புடையது

பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் நிலைப்பதில்லை: கனிமொழி எம்.பி.

மக்களுக்கான தேவையை அறிந்து திட்டத்தை செயல்படுத்தியது திமுக அரசு: திருச்சி சிவா

திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி. பேச்சு

நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் திமுக 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்: கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி. உறுதி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


