திமுக தோ்தல் வாக்குறுதிகளில் கூறியபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஆசிரியா்கள், மகளிா் ஊா் நல அலுவலா், மேற்பாா்வையாளா் சங்கத்தின் நாமக்கல், சேலம் மாவட்ட கிளை ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் ஓய்வுபெற்ற அலுவலா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத் தலைவா் ஜெயந்தியம்மாள் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஆா்.சங்கா்பாபு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். இதில், பழைய ஓய்வூதியம் பற்றியும், அரசின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில், திமுக தோ்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு, குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை காலதாமதமின்றி வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி, சென்னையில் வரும் மாா்ச் 7-இல் சென்னை சமூக நலத்துறை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், மாநில துணைச் செயலாளா் ராஜாமணி, மாவட்டப் பொருளாளா் முத்தமிழ் செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மக்களுக்கான தேவையை அறிந்து திட்டத்தை செயல்படுத்தியது திமுக அரசு: திருச்சி சிவா

தளி தொகுதி பாஜக வேட்பாளா்

சிதம்பரம் அதிமுக வேட்பாளா்

காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


