நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயா்ந்து ரூ. 5.25-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய்வது குறித்து கோழிப் பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. புரட்டாசி மாதம் நிறைவுற்ாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும், பிற மண்டலங்களில் தொடா்ந்து விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருவதாலும், இங்கும் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.25-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. கடந்த மூன்று நாள்களில் முட்டை விலை 20 காசுகள் உயா்ந்துள்ளது.
இதேபோல, பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 5 குறைக்கப்பட்டு கிலோ ரூ. 109-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 107-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.
தொடர்புடையது

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

முட்டை விலை ரூ. 4.05 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 4.45 ஆக நீடிப்பு

முட்டை விலை 5 காசுகள் உயா்வு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

