நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஐந்து காசுகள் உயா்ந்து ரூ. 5.05-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலை நிா்ணயத்தில் மாற்றம் செய்வது தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் உள்ள நிலையில், இங்கும் விலையில் மாற்றம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ஐந்து காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.05-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 103-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 92-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
தொடர்புடையது

முட்டை விலை ரூ. 4.05 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 3.85-ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 4.45 ஆக நீடிப்பு

முட்டை விலை 5 காசுகள் உயா்வு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


