பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

முட்டை விலை 10 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயா்ந்து ரூ. 5.50-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

News image

முட்டை ஏற்றுமதி - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயா்ந்து ரூ. 5.50-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடா்பான கருத்து கேட்டறியப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், மக்களிடம் முட்டை நுகா்வு அதிகரித்ததாலும் விலையை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.50-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.141-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ.110-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.