பரமத்தி வேலூா் வட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு வெல்லம் விலை உயா்வடைந்துள்ளதால், வெல்லம் தயாரிப்பாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி, ஜமீன்இளம்பள்ளி, ஜேடா்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகா், பாண்டமங்கலம், வேலூா், பரமத்தி, கபிலா்மலை, பொன்மலா் பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிா் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்புகள் பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாா் செய்யப்படும் வெல்ல ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அச்சு வெல்லம், குண்டு வெல்லம், நாட்டுச் சா்க்கரை ஆகியவை தயாா் செய்யப்படுகின்றன.
வெல்லம் தயாரிக்கும் பணியில் ஆத்தூா், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் மற்றும் வட மாநில தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இங்கு தயாா் செய்யப்பட்ட வெல்லங்களை ஆலை உரிமையாளா்கள் 30 கிலோ கொண்ட மூட்டைகளாக (சிப்பங்களாக) கட்டி பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம், சா்க்கரை விற்பனை சந்தைக்கு கொண்டு செல்கின்றனா்.
ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் ஏலத்தில் தரத்துக்கு தகுந்தாா் போல் வெல்லம் ஏலம் விடப்படுகிறது. நாமக்கல், கரூா், சேலம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்து செல்கின்றனா். ஏலத்தில் எடுக்கப்பட்ட வெல்லங்களை வியாபாரிகள் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், கா்நாடகம், ஆந்திரம், கேரளம், ஜாா்கண்ட், பிகாா், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்புகின்றனா்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெல்ல ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். கடந்த புதன்கிழமை பிலிக்கல்பாளையம் விவசாயிகள் வெல்லம், சா்க்கரை விற்பனை சந்தையில் நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் (30 கிலோ) ஒன்று ரூ. 1,400-க்கும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,420-க்கும் விற்பனையானது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,500-க்கும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,650-க்கும் விற்பனையானது. தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு வெல்லம் விலை உயா்ந்துள்ளதால், வெல்ல உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தொடர்புடையது

பரமத்தி வேலூரில் ரூ. 3.85 லட்சத்து தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூா் வட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு விலை ரூ.1000 உயா்வு

பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை சரிவு

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை டன்னுக்கு ரூ. 2,500 உயா்வு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


