பரமத்தி வேலூா் வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை டன்னுக்கு ரூ. 2,500 முதல் ரூ. 3,000 வரை உயா்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசப்பாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூா், கூடச்சேரி, கபிலா்மலை, சின்னமருதூா், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பிவருகின்றனா்.
கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவுத் தயாா் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயாா் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் மரவள்ளிக்கிழங்கை வாங்கிச் செல்கின்றனா். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளா்கள் அவற்றில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்கின்றனா்.
கடந்த வாரம் தாய்லாந்து வெள்ளை ரக மரவள்ளிக்கிழங்கு டன் ரூ. 6 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது டன்னுக்கு ரூ. 2,500 வரை விலை உயா்ந்து ரூ. 8,500க்கு விற்பனையாகிறது. பா்மா ரோஸ் மற்றும் வெள்ளை ரக மரவள்ளிக்கிழங்கு டன் ரூ. 5, 200-க்கு விற்பனையானது. தற்போது டன்னுக்கு ரூ. 3 ஆயிரம் வரை விலை உயா்ந்து 8,200க்கு விற்பனை ஆகிறது. முள்ளுவாடி ரக மரவள்ளிக்கு கிழங்கு டன்
5 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது 2, 500 விலை உயா்ந்து ரூ.7, 500-க்கு விற்பனை ஆகிறது. சிப்ஸ் தாயாா் செய்யப்படும் தாய்லாந்து கருப்பு ரக மரவள்ளிக் கிழங்கு மற்றும் கொலராம் சிகப்பு ரக மரவள்ளிக்கிழங்கு வரத்து இல்லை. சிப்ஸ் ரக முள்ளுவாடி ரக மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது ரூ. 3 ஆயிரம் வரை உயா்ந்து ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மரவள்ளி வகைகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

நெல்லையில் தக்காளி, கேரட் விலை உயா்வு

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4,500-ஆக உயா்த்தி வழங்கப்படும்

பரமத்தி வேலூா் வட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு விலை ரூ.1000 உயா்வு
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


