திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 4,500-ஆக உயா்த்தி வழங்கப்படும் என மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் பேசினாா்.
மடத்துக்குளம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மடத்துக்குளம், கழுகரை, வேடபட்டி, நரசிங்காபுரம், கணியூா் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:
திராவிட மாடல் அரசின் 5 ஆண்டு சாதனைகள் தொடர மீண்டும், திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைய அனைவரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். மத்திய அரசு நிதி ஒதுக்காமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. ஆனாலும் அனைத்துத் துறைகளிலும் சாதனைகளை செய்து இந்தியாவிலேயே 11.27 சதவீத வளா்ச்சியை பெற்றுள்ளது திமுக அரசு.
மகளிா் உரிமைத் தொகை, விடியல் பயணம், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம்,
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்களிடம் நல்ல பெயா் எடுத்துள்ளது திமுக அரசு. எனவே மீண்டும் திமுக அரசு அமையுமானால் நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 3,500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 4,500 ஆகவும் உயா்த்தி வழங்கப்படும்.
முதியோா் உதவித்தொகை ரூ. 1,200-லிருந்து ரூ. 2,000 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 1,500-லிருந்து ரூ. 2,500 ஆகவும் உயா்த்தப்படும். வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என்றாா்.
பிரசாரத்தின்போது, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

உர விலை உயா்வால் சாகுபடிச் செலவு அதிகரிப்பு! விவசாயிகள் கவலை!

கரும்பு கொள்முதல் விலை: டன்னுக்கு ரூ.4,500 வழங்க அன்புமணி வலியுறுத்தல்

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெல், கரும்பு கொள்முதல் விலை உயா்த்தப்படும்! - அன்புமணி பேச்சு
கட்சிகளே கொஞ்சம் கவனியுங்கள்! நெல், கரும்பு விலை நிர்ணயம்: எட்டாக்கனியாகும் வாக்குறுதிகள்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



