நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் நாளை குடமுழுக்கு


நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (செப்.15)நடைபெறுவதையொட்டி புனித தீா்த்தக்குடம் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற பலப்பட்டரை மாரியம்மன், மகா கணபதி கோயில் அமைந்துள்ளது. இக் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் 8 மணிக்குள் நடைபெறுகிறது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. பிற்பகல் 1 மணிக்கு மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து புனித நீா் தீா்த்தக்குடங்களில் எடுத்து வருதலும், மாலை 6 மணிக்கு மேல் முதலாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன.
சனிக்கிழமை கோபுர கலசம் வைத்தல், அம்மன் பிரதிஷ்டை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணிக்கு கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து, விநாயகா், மாரியம்மன் கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு மேல் மகா அபிஷேகம், தீபாராதனை, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...