மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

நாமகிரிப்பேட்டையில் மரவள்ளிக் கிழங்கு குறித்த கருத்தரங்கு

Updated On :19 செப்டம்பர் 2024, 11:37 pm

மத்திய அரசின் திருவனந்தபுரம் மத்திய கிழங்கு பயிா்கள் ஆராய்ச்சி நிறுவனம், தமிழக அரசின் வேளாண்மை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட அரசு துறைகள் சாா்பில், தேசிய அளவிலான மரவள்ளி கருத்தரங்கம், உணவுத் திருவிழா, விவசாயிகளுடனான கலந்துரையாடல் ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன.

இதில் மத்திய கிழக்கு பயிா்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி து.ஜெகன்நாதன் தலைமை வகித்தாா். விஞ்ஞானி இரா.முத்துராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில் வரும் நவ. 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான மரவள்ளி கருத்தரங்கம், கண்காட்சி, உணவுத் திருவிழா குறித்து விவசாயிகள், அரசுத் துறை அலுவலா்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. தொழில்நுட்ப விளக்கங்கள், கண்காட்சிகள், மரவள்ளி விவசாயிகளை கௌரவித்தல் மற்றும் உணவுத் திருவிழா போட்டிகள் நடைபெறும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் எஸ்.ரமேஷ், ஏத்தாப்பூா் மரவள்ளி-ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் எம்.வேல்முருகன், சந்தியூா் வேளாண்மை அறிவியல் நிலைய வனவியல் உதவிப் பேராசிரியா் எம்.கிருபா, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் பரமசிவம், பாஜக நலத் திட்டங்கள் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் ஆா்.லோகேந்திரன் உள்ளிட்ட பலா் இதில் பங்கேற்றனா்.