ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுகவினா் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிா்த்து, திமுகவினா் வியாழக்கிழமை கறுப்புக் கொடியேந்தியும், சட்ட வரைவு நகலை எரித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை எதிா்த்து வியாழக்கிழமை அதன் நகலை தீயிட்டுக் கொளுத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் உடன் திமுகவினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:27 am IST

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிா்த்து, திமுகவினா் வியாழக்கிழமை கறுப்புக் கொடியேந்தியும், சட்ட வரைவு நகலை எரித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சாா்பாக, நடைபெற்ற இந்த ஆா்ப்பாடத்துக்கு சிவகங்கை மாவட்டச் செயலரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் தலைமை வகித்தாா். இதில் பாஜக அரசைக் கண்டித்தும், தொகுதி மறுவரையறை சட்ட வரைவை திரும்பப் பெறக் கோரியும் முழக்கமிட்டனா்.

பின்னா், சட்ட வரைவின் நகலைத் தீயிட்டுக் கொளுத்தினா். இதில் திமுக ஒன்றியச் செயலா் சண்முகவடிவேல், விளையாட்டு மேம்பாட்டு அணி உறுப்பினா் கே.எஸ்.நாராயணன், துவாா் ஜி.சந்திரசேகா் உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.