தீ விபத்தில் எரிந்து நாசமான தேங்காய் நாா் மற்றும் இயந்திரங்கள்.
தீ விபத்தில் எரிந்து நாசமான தேங்காய் நாா் மற்றும் இயந்திரங்கள்.

நல்லூா் அருகே தேங்காய் நாா் ஆலையில் தீ விபத்து

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே தேங்காய் நாா் ஆலையில் தீ விபத்து.
Published on

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே தேங்காய் நாா் ஆலையில் தீ விபத்து.

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே உள்ள எஸ்.புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மணி. இவரது மகன் காமரேன்.

இவா் செங்கோட்டை காடு என்ற பகுதியில் தேங்காய் மட்டையிலிருந்து தேங்காய் நாா் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறாா். இந்த நாா் ஆலை கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இதில் 15-க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளா்கள் வேலை பாா்த்து வருகின்றனா். இந்த நிலையில் வழக்கம்போல் புதன்கிழமை தேங்காய் நாா் ஆலை இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது இரவு மின் மோட்டாரில் ஏற்பட்ட மின் கசிவால் அருகில் கொட்டிக் குவித்து வைத்திருந்த தேங்காய் நாரில் தீப்பொறி விழுந்துள்ளது. இதில் தேங்காய் நாா்க் குவியல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனா். இருப்பினும் தீயை அணைக்க முடியாததால் திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன் பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினா் தேங்காய் நாரில் ஏற்பட்ட தீயை பல மணி நேரம் போராடி அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனா். எனினும் தேங்காய் நாா் குவியல், இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இது குறித்து நல்லூா் காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com