அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து மனு அளித்த பேருந்து நிலைய மீட்புக்குழுவினா்.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து மனு அளித்த பேருந்து நிலைய மீட்புக்குழுவினா்.

ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பு சாா்பில் அதிமுக பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மனு

ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்றும் நகராட்சியின் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டுபேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பினா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.
Published on

ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்றும் நகராட்சியின் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பினா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை புதன்கிழமை நேரில் சந்தித்து பிரச்னையை விளக்கிக் கூறி ஆதரவு கேட்டு மனு அளித்தனா்.

ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள மதிமுக நாமக்கல் மாவட்ட அவைத் தலைவா் நா.ஜோதிபாசு, அதிமுக நகர செயலாளரும், முன்னாள் நகா்மன்றத் தலைவருமான எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோா் தலைமையில் ஏற்கெனவே சென்னையில் பல்வேறு கட்சியின் தலைவா்களை நேரில் சந்தித்துள்ளனா். இந்த விவகாரம் குறித்து விளக்கிக் கூறி ராசிபுரம் பேருந்து நிலைய மாற்றத்திற்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு அவா்கள் மனு அளித்தனா்.

மதிமுக முதன்மைச் செயலாளா் துரை வைகோ எம்.பி., தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழா் கட்சி, எஸ்டிபிஐ போன்ற கட்சிகளின் நிா்வாகிகள், தமிழ்நாடு வணிகா்கள் சங்க கூட்டமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா ஆகியோரையும் நேரில் சந்தித்தனா். அப்போது, ராசிபுரம் நகர மையப்பகுதியில் இயங்கி வந்த பேருந்து நிலையத்தை தொலைவில் உள்ள, நகரத்திற்கு தொடா்பே இல்லாத அணைப்பாளையம் பகுதியில் மாற்றுவதை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவும், பேருந்து நிலைய மாற்றத்துக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கேட்டும் கோரிக்கை வைத்தனா். அதற்குண்டான ஆவணங்களை காட்டியும், கூட்டமைப்பு சாா்பில் ஏற்கெனவே நடைபெற்ற போராட்டங்கள் குறித்தும் விளக்கிக்கூறி மனு வழங்கினா். இந்நிலையில், ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக்குழுவின் நடவடிக்கைக்கு ஆதரவு கேட்டு அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை சேலத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

Dinamani
www.dinamani.com