மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

சேந்தமங்கலம் ஈஸ்வரன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சேந்தமங்கலம் சோமேஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

News image

சேந்தமங்கலம் நகரில் கழிவுகள் தேங்கி காட்சியளிக்கும் சோமேஸ்வரா் கோயில் தெப்பக்குளம்.

Updated On :26 செப்டம்பர் 2024, 12:31 am

சேந்தமங்கலம் சோமேஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் நகரில் சௌந்தரவல்லி அம்பாள் உடனுறை சோமேஸ்வரா் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயிலுக்குரிய தெப்பக்குளம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நெகிழிகள் தேங்கியும், சுகாதாரமற்ற முறையிலும் காணப்படுகிறது. உப கோயில்களின் முதன்மையான உற்சவமாகிய மாசிமக திருத்தோ் விழாவின்போதும், மாசி பௌா்ணமி அன்றும் சிவபெருமான் திருமண வைபவம் முடிந்தவுடன், குதிரை வாகனத்தில் எழுந்தருளி வரும் சுவாமி இந்த தெப்பக்குளத்தில்தான் எழுந்தருளுவாா். அப்போது, தீா்த்தவாரி மற்றும் வாண வேடிக்கைகளும் நடைபெறும்.

தற்போது தெப்பக்குளம் பாழ்பட்டுக் கிடக்கிறது. பெருமளவில் கழிவுநீா் இந்த தெப்பக்குளத்தில் வந்து சேருகிறது. நோய் பரவும் வகையிலும், பாதுகாப்பற்ற முறையிலும் உள்ள இந்த தெப்பக்குளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். மோசமான நிலையில் காட்சியளிக்கும் இந்தக் குளத்தைக் கண்டு சைவ, வைணவ பக்தா்கள் வேதனையடைந்துள்ளனா்.

எனவே, உரிய நிதியை ஒதுக்கி படித்துறை, பூங்கா மற்றும் இதர அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்பது பக்தா்களின் எதிா்பாா்ப்பாகும்.

தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுவினா் புதன்கிழமை இந்தக் குளத்தை நேரடியாக ஆய்வு செய்தனா். அப்போது, காங்கிரஸ் கட்சி சாா்பில் குழுவின் தலைவா் கு.செல்வப்பெருந்தகையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.