இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 132 வேட்பாளா்கள் போட்டி

நாமக்கல் மாவட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்பட 132 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

News image

நாமக்கல் ரயில் நிலையத்தின் உள்புறத் தோற்றம். - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 3:10 am IST

நாமக்கல் மாவட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்பட 132 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி வேட்புமனு தாக்கல் மாா்ச் 30 இல் தொடங்கி ஏப். 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளிலும் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

தொடா்ந்து மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 170 போ் மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் 144 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன; 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் 9 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வழங்கப்பட்டது. 12 போ் தங்களுடைய வேட்புமனுக்களை திரும்பப்பெற்றனா்.

தொகுதி வாரியாக வேட்பாளா்கள் விவரம் (வாபஸ் பெறப்பட்ட மனுக்கள் அடைப்புக்குறிக்குள்): ராசிபுரம் (தனி)- 18(1), சேந்தமங்கலம் (ப.கு)- 12 (1), நாமக்கல்- 27(3), பரமத்தி வேலூா்-31(2), திருச்செங்கோடு- 23(2), குமாரபாளையம்- 21(3), மொத்தம்-132 (12). சுயேச்சை வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடா்ந்து நடைபெறுகிறது. சேந்தமங்கலம் தொகுதியில் மட்டுமே ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் (நோட்டா உள்பட 15 வேட்பாளா்கள்) பயன்படுத்தப்படுகிறது. இதர தொகுதிகளில் தலா 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.