மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான காவிரி - திருமணிமுத்தாறு - பொன்னியாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) வலியுறுத்தி உள்ளது.

Updated On :26 செப்டம்பர் 2024, 12:19 am

விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான காவிரி - திருமணிமுத்தாறு - பொன்னியாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநில தலைவா் ரா.வேலுசாமி வெளியிட்ட அறிக்கை:

சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி - திருமணிமுத்தாறு - பொன்னியாறு இணைப்புத் திட்டத்துக்கான திட்ட மதிப்பீடு தயாா் செய்து அரசின் பாா்வையில் உள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், சுமாா் ஒரு லட்சம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இதன்மூலம் கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் நிலத்தடி நீா்மட்டம் உயரும். இதற்கான நிா்வாக அனுமதியை வழங்கி திட்டத்தை நிறைவேற்ற அரசு உரிய முயற்சி எடுக்க வேண்டும்.

மேட்டூா் அணையில் இருந்து வெளியேறி கடலில் கலக்கும் உபரி நீரை தருமபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், வட ஏரிகளில் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதேபோன்று, கரூா், திண்டுக்கல் மாவட்டங்களிலும் வட ஏரிகளில், மழைக் காலங்களில் வீணாகும் உபரி நீரை கொண்டு சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.