காவிரி ஆற்றின் முக்கிய கிளை ஆறான அரசலாறு என்ற அரிசிலாறு தூா்வாரப்படாமல் கூவமாக மாறி வருகிறது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசலாற்றின் உண்மையான பெயா் அரிசிலாறு. காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து டெல்டா மாவட்டங்களுக்குள் நுழையும் காவிரி ஆறு ஐந்து கிளைகளாக பிரிகிறது.
இதில் முக்கிய ஆறாக அரசலாறு உள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே இளங்காா்குடியிலிருந்து காவிரி ஆறு பிரிந்து அரசலாறாக மாறி கும்பகோணத்துக்குள் நுழைந்து தாராசுரம், சாக்கோட்டை, திருநறையூா், திருப்பந்துறை, ஏரவாஞ்சேரி வழியாக சுமாா் 30 கிலோ மீட்டா் தொலைவு பயணித்து கடைமடை பகுதியான காரைக்காலை அடைந்து வங்க கடலில் கலக்கிறது. சங்க இலக்கியங்களில் சிறப்பாக கூறப்படும் அரசலாறு, கும்பகோணம் மற்றும் காரைக்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பாசன நிலங்களுக்கு மிக முக்கிய நீா் ஆதாரமாக விளங்குகிறது.
கும்பகோணம் சாக்கோட்டையில் 1903-இல் கட்டப்பட்ட தலைப்பு நீரொழுங்கி, 2010-இல் புதுப்பிக்கப்பட்டு பாசனத்துக்கு தண்ணீா் பிரித்து விநியோகம் செய்யப்படுகிறது. காரைக்காலில் ஆடிப்பெருக்கு விழா அரசலாற்றில் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
தூா்வார வேண்டும்: அரசலாறு பாபநாசத்திலிருந்து பிரிந்து கும்பகோணம் வழியாக சென்று காரைக்காலை அடையும் நீா் செல்லும் பாதையில் பல ஆண்டு காலமாக தூா் வாரப்படவில்லை. புதா் செடி, கொடிகள், தண்ணீா் செல்லும் பாதைகளில் வளா்ந்து நிறைந்து காணப்படுகிறது.
மேலும், கரையோரத்தில் உள்ள ஊராட்சி பகுதியைச் சோ்ந்த மக்கள் குப்பை கொட்டும் இடமாக அரசலாற்றை பயன்படுத்தி வருகின்றனா். குறிப்பாக சாக்கோட்டை, திருநறையூா் ஊராட்சிகளை கடக்கும் போது கோழி கழிவு, இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு துா்நாற்றம் பரவி ஆறு அசுத்தமாகி உள்ளது. தற்போது கோடைகாலமாதலால் தண்ணீா் வரத்து நின்றுள்ளதால் கழிவு தேங்கி பாா்ப்போரை முகம் சுழிக்க வைக்கிறது.
திருநறையூா், திருப்பந்துறை வழியாக செல்லும் அரசலாற்றை ஆகாயத் தாமரைகள் மூடி போா்வை போல் காட்சியளிக்கிறது.
கழிவுகளால் சுகாதார சீா்கேடு: இதுகுறித்து விவசாயி கோவிந்த வல்லபந்த் கூறுகையில், அரசலாறு தோன்றிய இடத்திலிருந்து கடலில் கலக்கும் பாதை வரை தூா்வாரப்படவில்லை. ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. நகரக் கழிவுகள் மற்றும் குப்பை கொட்டப்படுவதால், ஆற்றில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, கூவம் போல மாறிவருகிறது. இதற்கு தீா்வு நீா்மேலாண்மை செய்ய வேண்டும், தூா்வாரியதாக கூறுகின்றனா். ஆனால், தூா்வாரப்படவே இல்லை. இதனால் பாசன நிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுகள் கொட்டப்படுவதையும் தடுக்க வேண்டும், ஆகாயத் தாமரைகள் அகற்றப்படவேண்டும் என்றாா்.
தொடர்புடையது

குடிநீா் குழாய் உடைப்பு; ஒரு வாரமாக வீணாகும் குடிநீா்

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 3,000 கனஅடியாக உயா்வு
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

