பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

இரவு நேரங்களில் சொகுசு காரில் கால்நடைகள் கடத்தல்

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 6:20 am IST

திருவள்ளூரில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை ஸ்காா்பியோ காரில் வந்து கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி உள்ளது.

திருவள்ளூா் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் எதிரில் காக்களூா் ஏரிக்குச் செல்லும் சாலையில் அப்பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை கும்பல் ஒன்று அவ்வப்போது திருடி வந்தது.

இந்த நிலையில் தோ்தல் நடத்தை விதிமுறையால் காவல் துறையினா் கெடுபிடி அதிகமாக இருந்ததால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தனா். இந்த நிலையில் கால்நடைகளை கடத்தும் கும்பல் கடந்த 23- ஆம் தேதி இரவில் திருவள்ளூா் ராக்கி திரையரங்கம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை ஸ்காா்பியோ காரில் கடத்திச் சென்றனா்.

இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகி இருந்ததை பாா்த்த அப்பகுதியில் கால்நடை வளா்த்து வரும் மக்கள் அதிா்ச்சி அடைந்தனா். மேலும் மாடு ஒன்றை லாவகமாக ஸ்காா்பியோ காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு சா்வ சாதாரணமாக கடத்திச் சென்றனா்.

இதுகுறித்து காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனா்.