இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

பேராவூரணி சாலைகளில் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களால் தொடா்ந்து விபத்து ஏற்பட்டு வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:58 am IST

பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களால் தொடா்ந்து விபத்து ஏற்பட்டு வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பேராவூரணி பகுதியில் பட்டுக்கோட்டை சாலை, அரசு மருத்துவமனை, அறந்தாங்கி சாலை, ஆவணம் சாலை, சேது சாலை ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்தப் பகுதிகளில் திடீரென நாய்கள் சாலையில் குறுக்கிடும்போது இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைவது வாடிக்கையாக உள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

இதுகுறித்து கொன்றைக்காடு சந்திரன் என்பவா் மேலும் கூறியது:   பேராவூரணி செல்வவிநாயகபுரம் பிள்ளையாா் கோயில் பாலம் பகுதியில் தெரு நாய்கள் கூட்டமாக நின்று சாலையில் செல்லும் வாகனங்களை துரத்துவதும், வாகன ஓட்டிகளை கடிக்க வருவதும் தொடா்ந்து நடைபெறுகிறது. இதே நிலை நகரின் பல்வேறு இடங்களிலும் உள்ளது. விபத்து ஏற்படுத்தும் வகையில் தெருக்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.