கொடைக்கானல், மே 10: கொடைக்கானல் சாலைகளில் குடிநீருக்காக பதிக்கப்பட்ட இரும்புக் குழாய்கள் ஆங்காங்கே வெளியில் நீட்டிக் கொண்டுள்ளன. இதனால், விபத்து அபாயம் உள்ளதால், இந்தக் குழாய்கள் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சாலைகளான அண்ணாசாலை, ஆனந்தகிரி சாலை, உகாா்த்தேநகா், காா்மேல்புரம் சாலை, சீனிவாசபுரம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி சாா்பில் குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டன.
இந்தக் குழாய்களின் அடிப் பகுதியில் தண்ணீா் விநியோகம் செய்யவதற்கான திருகு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரும்புக் குழாய் தரைக்கு மேல் தெரியும் வகையில் பதிக்கப்பட்டது. ஆனால், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சரியான முறையில் பதிக்காமல் இரும்பு குழாய்கள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதியை வாகனங்களில் கடந்து செல்வோா் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, இந்தக் குழாய்களை சரியான முறையில் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மேலும், கொடைக்கானலில் தற்போது குடிநீா் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நகா்ப் பகுதிகளான லாஸ்காட் சாலை, ஆனந்தகிரி 4-ஆவது சாலை, தைக்கால் சாலைப் பகுதிகளில் குடிநீா்க் குழாய்கள் சேதமடைந்து தண்ணீா் வீணாகி வருகிறது. எனவே, இவற்றையும் சீரமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

சேதமடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள பழுதான மரங்களை அகற்ற வலியுறுத்தல்

பேராவூரணி சாலைகளில் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

