அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா்.
Updated On :7 ஏப்ரல் 2025, 8:35 pm

Din

நாமக்கல்: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட மையம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஆனந்த் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் விஜயகாந்த் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

இதில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களின் பணித்தன்மையை கருத்தில்கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சவரம்பு ஐந்து சதவீதம் என்பதை ரத்து செய்து மீண்டும் பழைய முறைப்படி 25 சதவீதமாக நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், வருவாய்த் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.